சுற்றுலா சென்ற மாணவர்கள் திரும்ப வராததைக் கண்டு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே அரசு பள்ளி ஒன்று உள்ளது. பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்தனர். இதையடுத்து, 42 மாணவர்களுடன், ஆசிரியர்கள் கேரளாவுக்கு சென்றனர்.

சுற்றுலா முடிந்து ஆசிரியர்கள், மாணவர்களுடன் திரும்பி உள்ளனர். மாணவர்களை அழைத்துச் செல்ல அவர்களின் பெற்றோர் வந்திருந்தனர். பின்னர் அவரவர் தங்களுடைய பெற்றோர்களை சந்தித்தனர். அப்போது, சுற்றுல சென்ற தங்கள் பிள்ளைகள் திரும்பி வரவில்லை என பெற்றோர்கள் சிலர் பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டுள்ளனர்.

பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் முறையான பதிலை தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், காணாமல் போன மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தங்கள் பிள்ளைகளை, வழியிலேயே இறக்கிவிட்டு விட்டு, ஆசிரியர்கள் வந்துள்ளதாகவும் அவர்கள் குற்றச்சாட்டு கூறியிருந்தனர். இது குறித்து, காணாமல் போன மாணவர்களின் பெற்றோர்கள் மார்த்தாண்டம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து, போலீசார், பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா சென்ற மாணவர்கள் திரும்ப வராததால் பெற்றோர்கள் மட்டுமல்ல அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.