பல கல்லூரி மாணவிகளை குறி வைத்து சீரழித்த திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்து உள்ளனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு வருகிறது என்று இன்னொரு பக்கம் பூகம்பம் கிளம்ப குற்றவாளிகள் தண்டிக்கப்போடுவார்களா.. என்ற கேள்வி எழுந்தது.

இப்படிப்பட்ட காம கொடூரன்களிடம் சிக்கி சின்னாபின்னமான பெண்களில் ஒரு பெண்ணின் அழுகுரல் அடங்கிய அந்த வீடியோ தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இதன் பின்னர் மெல்ல மெல்ல இந்த விவகாரரத்திற்கு இப்போது தான் எதிர்ப்பு கிளம்ப தொடங்கி உள்ளது சமூக வலைத்தளங்களிலும் மக்கள் பெரும் கண்டன குரலை எழுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் திருச்சி மற்றும் கோவை, நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது மாணவர்களின் போராட்டம் வலுப்பெற தொடங்கி உள்ளதால் பொள்ளாச்சி சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றே கூறலாம். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மாணவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதன் மூலம் பொள்ளாச்சி விவகாரம் நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.