10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்ட நிலையில், பொதுத்தேர்வில் மாணவர்கள் கால்குலேட்டரை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.

அதன்படி 10ம் வகுப்பு பொதுத் தேர்வானது மார்ச் 11ம் தேதி புதன் கிழமை தமிழ் தேர்வுடன் தொடங்குகிறது. அடுத்ததாக 16ம் தேதி திங்கள் கிழமை ஆங்கிலம், 25ம் தேதி புதன் கிழமை கணிதம், 30ம் தேதி திங்கள் விழமை அறிவியல், ஏப்ரல் 2ம் தேதி வியாழன் கிழமை சமூக அறிவியல், 6ம் தேதி திங்கள் கிழமை விருப்ப மொழி தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் மகேஸ் கூறுகையில், 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின் போது கால்குலேட்டர் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் எந்தவித பதற்றமும் இன்றி தேர்வை எதிர்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…