MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போ ஸ்டார்ட் ஆகுது? அட்டவணையை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போ ஸ்டார்ட் ஆகுது? அட்டவணையை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வுகள் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Nov 04 2025, 11:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
Image Credit : Asianet News

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் முக்கிய தேர்வாக பார்க்கப்படுகிறது. இந்த பொதுத் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

25
பள்ளி மாணவர்கள்
Image Credit : Google

பள்ளி மாணவர்கள்

அதில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 8.7 லட்சம் பேர் பொதுதேர்வு எழுத உள்ளனர்.

Related Articles

Related image1
அண்ணா.. ப்ளீஸ்.. என்ன விட்டுடுங்க! கதறிய கோவை கல்லூரி மாணவி! விடாத கொடூரன்கள்! இரவோடு இரவாக சுட்டுப்பிடித்தது எப்படி?
Related image2
கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் நிலை என்ன? அந்த 3 பேர் யார்? கோவை ஆணையர் பரபரப்பு தகவல்
35
12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை
Image Credit : Google

12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2ம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள், மார்ச் 5ம் தேதி ஆங்கிலம், மார்ச் 9ம் தேதி வேதியியல், கணக்கியல் புவியியல், மார்ச் 13ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள், மார்ச் 17ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது), மார்ச் 23ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம், மார்ச் 26ம் தேதி தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் தேர்வுகள் நடைபெறுகிறது.

45
12ம் வகுப்பு முடிவுகள்
Image Credit : our own

12ம் வகுப்பு முடிவுகள்

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி ஒன்பதாம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

55
கால்குலேட்டருக்கு அனுமதி
Image Credit : our own

கால்குலேட்டருக்கு அனுமதி

பன்னிரண்டாம் வகுப்பு கணக்கு பதிவியல் பொதுத் தேர்வுக்கு கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கணக்கு பதிவியல் தேர்வு கால்குலேட்டர் அனுமதி. மாணவர்கள் நீண்ட கால கோரிக்கை என்ற அடிப்படையில் இந்த ஆண்டு கணக்கு பதிவியல் தேர்வில் கால்குலேட்டருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்
பள்ளிகள்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.! விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Recommended image2
1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..
Recommended image3
தவெக கூறுவது அத்தனையும் பொய்! விதியை மீறிய விஜய் மீது நடவடிக்கையா? உண்மையை புட்டு புட்டு வைத்த காவல்துறை
Related Stories
Recommended image1
அண்ணா.. ப்ளீஸ்.. என்ன விட்டுடுங்க! கதறிய கோவை கல்லூரி மாணவி! விடாத கொடூரன்கள்! இரவோடு இரவாக சுட்டுப்பிடித்தது எப்படி?
Recommended image2
கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் நிலை என்ன? அந்த 3 பேர் யார்? கோவை ஆணையர் பரபரப்பு தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved