தன் உயிரைக் கொடுத்து 5 பேரை காப்பாற்றிய மாணவன்… மூளைச்சாவு அடைந்த பின் உடல் உறுப்பு தானம்!!

சென்னையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் ஐந்து பேருக்கு வாழ்வளித்துள்ளது.

student who was brain dead in accident donated his organs to five peoples

சென்னையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் ஐந்து பேருக்கு வாழ்வளித்துள்ளது. சென்னையை சேர்ந்த இறுதியாண்டு கல்லூரி மாணவர் இந்த மாத தொடக்கத்தில் ஜிஎஸ்டி சாலையில் விபத்துக்குள்ளானர். இதை அடுத்து அவர் அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ரேலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதையும் படிங்க: அச்சுறுத்தும் கஞ்சா சாக்லேட்.. குறிவைக்கப்படும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்.. கோவையில் பரபரப்பு..

இளைஞனைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட பிறகு, போராட்டமும் முயற்சியும் வீணாகிறது.  அந்த வாலிபர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து மருத்துவமனையில் உள்ள சமூகப் பணியாளர்கள் இறந்தவரின் உடல் உறுப்புகள் இன்னும் சாதாரணமாக இயங்கி வருவதால், உடல் உறுப்பு தானம் பற்றி அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: ப்ரீ பையர் கேம் ஆல் மோதல்.. தேவாலயம், கடை, வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல்.. 4 பேருக்கு அரிவாள் வெட்டு.!

அவரது பெற்றோர்கள் ஒப்புகொண்டதை அடுத்து மாணவனின் உடல் உறுப்புகளை சட்டப்பூர்வமாக எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதை அடுத்து மூளைச்சாவடைந்த மாணவனின் ஒரு சிறுநீரகம், இரண்டு நுரையீரல்கள் மற்றும் ஒரு கல்லீரல் மற்ற நோயாளிகளுக்கு மாற்றப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் மற்றும் ஒரு இதயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மாற்றப்பட்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios