அச்சுறுத்தும் கஞ்சா சாக்லேட்.. குறிவைக்கப்படும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்.. கோவையில் பரபரப்பு..
கோவையில் போதை பொருளான கஞ்சா சாக்லேட்டை, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த ராஜஸ்தான் வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்புடைய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கஞ்சாவை சாக்லேட் வடிவத்தில் தயாரித்து அதனை விற்பனை செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பள்ளி மற்று கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்கப்படும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் கோவையில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில், கஞ்சா பயன்பாடு அதிகளவில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவர்களை கண்டுபிடித்து, மொத்த கும்பலை கைது செய்ய தனிபடை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி தலைமையிலான தனிப்படை போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
மேலும் படிக்க:தீவிரவாதிகளின் பிடியில் தமிழ்நாடு.. ஆளுநர் மாளிகையில் அலறிய பாஜக மாநில து.த கே.பி ராமலிங்கம்.
அப்போது தெப்பக்குளம் அருகே சந்தேகப்படும் படியாக பைக்கில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கேத்தன் குமார் என்பதும் கோவையில் டீக்கடையில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இப்பினும் முன்னுக்குபின் முரணாக பேசியதால், அவரிடம் தங்கள் பாணியில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பள்ளி, கல்லுாரிகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதும் தெரியவந்தது.மேலும் இதனை அடுத்து அவர் பதுக்கி வைத்திருந்த சுமார் 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 35 கிலோ கஞ்சா சாக்லேட் பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதுதவிர, தடை செய்யப்பட்ட 2 லட்சம் மதிப்பிலான 140 கிலோ குட்கா, பான் மசாலா ஆகியவையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க:எடப்பாடி சிறையில் இருந்து கட்சி நடத்துவாரா.? வெயிட் பண்ணி பாருங்க.. இபிஎஸ்க்கு ஜர்க் காட்டும் புகழேந்தி.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் பயன்படுத்தி வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர். இதுக்குறித்து காவல்துறை தரப்பில் , கஞ்சாவை, சாக்லேட் போல மாற்றி, அதன் மீது வழக்கமான மிட்டாய் கவர் சுற்றி விடுகின்றனர் என்றனர். மேலும் வெளிப்பார்வைக்கு மிட்டாய் போலவே தெரியும் இவற்றை சுவைத்துப் பார்த்தால் மட்டுமே கஞ்சா சாக்லேட் என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விவரிக்கின்றனர். பிற மாவட்டங்கள், மாநிலங்களிலும் இவர்களது நெட்வொர்க் இருக்க வாய்ப்புள்ளது என்றும் இதில் தொடர்புடைய கும்பலை விரைவில் கைது செய்வோம் என்றும் தெரி தெரிவித்தனர்.
மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. மாணவி தங்கியிருந்த பள்ளியின் விடுதி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..