மேலும் ஒரு அதிர்ச்சி.. ”நீட் தேர்வு” தோல்வி பயத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை..
நீட் தேர்வில் தோல்வி பயத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வில் தோல்வி பயத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலத்தை சேர்ந்த அமல்ராஜ் மற்றும் வெண்ணியார் தம்பதியினரின் மகள் ராஜலட்சுமி. இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு, 2 ஆண்டுகளாக மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் தேர்விற்கு பயிற்சி பெற்று வந்துள்ளார்.
முன்னதாக கடந்த 2 முறை எழுதிய நீட் தேர்வில் இவர் தோல்வியடைந்துள்ளார். இதனால் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்விற்கு படித்து, 3 வது முறையாக தற்போது தேர்வு எழுதியுள்ளார். நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
மேலும் படிக்க:திருப்பதி பிரம்மோற்சவம் 27ல் தொடக்கம் .. சிறப்பு பேருந்துகள் எந்தெந்த வழிகளில் இயக்கம்..? முழு விவரம்..
மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கான விடைக்குறிப்பு (ஆன்சர் கீ) வெளியிடப்பட்டது. இதனை பார்த்துவிட்டு மாணவி ராஜலட்சுமி தான் இந்தமுறையும் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவேன் என்று பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். தனது மருத்துவ கனவு சிதைந்து போனதாகவும் கூறி கவலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் மாணவியின் பெற்றோர் வயலுக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ராஜலட்சுமி தூக்கிட்டு தற்கொலைச் செய்துக்கொண்டுள்ளார்.நீட் தேர்வு தோல்வி பயத்தால் 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: இன்று நீலகிரி, கோவையில் மிக கனமழை .. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை..? வானிலை அப்டேட்