தருமபுரி

மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் சாராயக் கடையை அகற்ற்க் கோரி தருமபுரியின் இரு வெவ்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டி இரயில்வே கேட் அருகே அரசு சாராயக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

மக்கள், மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக உள்ள இந்த சாராய்க் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சாராயக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி சக்தி தலைமை வகித்தார். மாநில நிர்வாகி நந்தன், மாவட்ட நிர்வாகிகள் பாண்டியன், ஜெகநாதன், கார்த்திக், விசுவநாதன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினார்கள்.

“மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாராயக் கடையை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதேபோன்று தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் அருகே மலையனூரில் சாராயக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சமபவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தனர்.

சாராயக் கடையை அகற்றும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அப்பகுதி மக்கள் அறிவித்துவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

சாராயக் கடைக்கு இடம் அளித்தவர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மிரட்டியதால் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.