Asianet News TamilAsianet News Tamil

ஐட்ரோகார்பனுக்கு எதிராக 136-வது நாளாக போராட்டம்; கண்டு கொள்ளாத அரசுக்கும் கண்டனம்…

Struggle for the 136th day against hydrocarban
Struggle for the 136th day against hydrocarban
Author
First Published Aug 26, 2017, 6:32 AM IST


புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஐட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 136-வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இப்பவும் அரசு கண்டுகொள்ளவில்லை.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனைக் கண்டித்தும், ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 100-நாள்களுக்கு மேலாக போராடும் மக்களைக் கண்டுக்கொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி நெடுவாசலில் மக்கள் தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தைத் தொடங்கினர். நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே நேற்று நடைபெற்றப் போராட்டத்தில், ஐட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராடினர்.

இதில், திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி முதல் 2-வது கட்டமாக போராட்டத்தை தொடங்கினர்.அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதில் விவசாயிகள், மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios