Strict action against liar complainants on state school ...
நீலகிரி
நீலகிரியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மீது பொய் புகார் அளிப்பவர்கள் மீது காவலாளர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மக்கள் மனு அளித்தனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார்.
இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி ஆட்சியரிடம் கொடுத்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் கூடலூர் சேரம்பாடி அருகே உள்ள மராடி பகுதியை சேர்ந்த மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியது:
"மராடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணி புரிந்து மாறுதலான ஆசிரியர் ஒருவர் பள்ளியின் மீது சிலரை வைத்து பொய் புகார்கள் அளித்து வருகிறார். இதுகுறித்து தேவாலா காவல் துணை கண்காணிப்பாளர் சக்திவேல் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த நாங்கள் ஒரு தனிநபர் உண்மைக்கு புறம்பாக புகார் அளிப்பதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தோம்.
மேலும், அந்த நபரின் தூண்தலின் பேரில் முன்னாள் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சிலரை வைத்து புகார் அனுப்பி இருந்தார். இந்த புகார் உண்மையில்லை என்று விசாரணை நடத்திய காவல் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
எனவே, பள்ளி மீது பொய் புகார் அளிக்கும் சம்பந்தப்பட்ட நபர்களை காவலாளர்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டிருந்தது.
