பல்லே இல்லாத பசுமைதீர்ப்பாய பாம்பை சீற விட்டு வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு! ஸ்டெர்லைட் ஷாக்ஸ்!!

ரிட்டயர்டு ஹைகோர்ட் நீதிபதியான அரிபரந்தராமன், “ஆலையை மூடக்கோரிய அரசின் உத்தரவை மீறி, இந்த வழக்கை விசாரணை செய்ய பசுமைதீர்ப்பாயத்துக்கு அதிகாரமே கிடையாது. ஐகோர்ட்டோ, சுப்ரீம்கோர்ட்டோதான் விசாரணை செய்ய முடியும்.” என்றிருக்கிறார்.

Sterlite issue... Tamil Nadu govt order to close Vedanta plant is unjustified

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த களேபரத்தில் அரசின் துப்பாக்கியால் அலற அலற சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேருக்கு (அரசின் கணக்குப்படி மட்டும்) முதலாமாண்டு காரியம் நடைபெறுவதற்கான காலம் கூட இன்னும் வரவில்லை. ஆனால் அதற்குள் அந்த ஆலையை மீண்டும் திறப்பதற்கான சாத்தியகூறுகள் சகல விதமாக துவங்கிவிட்டன. இதற்கு அடிப்படை பசுமைதீர்ப்பாயம்தான். Sterlite issue... Tamil Nadu govt order to close Vedanta plant is unjustified

இந்த தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவானது ‘எல்லா ஆராய்ச்சிகளையும்’ முடித்துவிட்டு, சமீபத்தில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு நியாயமற்றது.’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்த அறிக்கையை வாசித்து, ஆலோசித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ‘இந்த அறிக்கையின் நகலை தமிழக அரசு, வேதாந்த குழுமம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆகியோருக்கு மட்டும் கொடுத்தால் போதும். பொதுநலன் அடிப்படையில் இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை.’ என்று மிக கெத்தாக  குறிப்பிட்டிருக்கிறது. இந்த விஷயமானது, ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்பாளர்களுக்கு மத்தியில் தனி ரூட்டில் எரிமலையை பொங்க விட்டிருக்கிறது. Sterlite issue... Tamil Nadu govt order to close Vedanta plant is unjustified

இந்த நிலையில் ரிட்டயர்டு ஹைகோர்ட் நீதிபதியான அரிபரந்தராமன், “ஆலையை மூடக்கோரிய அரசின் உத்தரவை மீறி, இந்த வழக்கை விசாரணை செய்ய பசுமைதீர்ப்பாயத்துக்கு அதிகாரமே கிடையாது. ஐகோர்ட்டோ, சுப்ரீம்கோர்ட்டோதான் விசாரணை செய்ய முடியும்.” என்றிருக்கிறார்.

 Sterlite issue... Tamil Nadu govt order to close Vedanta plant is unjustified

ஆக, அதிகாரமே இல்லாத தேசிய பசுமைதீர்ப்பாயம் இந்த வழக்கில் தலையிடுவதும், விசாரணை செய்வதும், குழு அமைத்து ‘அரசு ஆலையை பூட்டியது தவறு’ என்று சொல்வதும், அந்த அறிக்கையை ஆலை எதிர்ப்பாளர்களுக்கு தரக்கூடாது! என சொல்வதும், ஆலை திறப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை உருவாக்கும் நோக்கில் செயல்படுவதும் சர்வாதிகாரமே! தமிழகம் மற்றும் தமிழ்நாட்டில் வட இந்தியர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்போர்களை நசுக்க நினைக்கும் ஒரு மிகப்பெரிய அதிகார மையத்தின் ஏவலின் படி இந்த தீர்ப்பாயம் பாய்ந்து கொண்டிருக்கிறது. அண்டஹ் அதிகார மையம் யார்? என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்...என பொங்குகிறார்கள் பொது விமர்சகர்கள். Sterlite issue... Tamil Nadu govt order to close Vedanta plant is unjustified

இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் இப்படியெல்லாம் பாய்வதற்கும், சவடால் உத்தரவு வெளியிடுவதற்கும் தமிழக அரசின் மெத்தனப்போக்கும் ஒரு முக்கிய காரணமே! ஆலையை மூடச்சொல்லி தமிழக அரசு உத்தரவு போட்டபோதே ‘வெறும் அறிக்கையால் எந்த பலனுமில்லை, சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றியே ஆக வேண்டும்.’ என்று வல்லுநர்கள் கருத்து சொல்லியிருக்கிறார்கள். Sterlite issue... Tamil Nadu govt order to close Vedanta plant is unjustified

ஆனால் அதை அரசு கண்டுகொள்ளாததன் விளைவாகவும் இந்த நிலை வந்திருக்கிறது, ஒருவேளை சிறப்பு சட்டம் போடாமல் தமிழக அரசு தவிர்த்தது கூட அந்த அதிகார மையத்தின் உத்தரவாக இருக்கலாம்! என்றும் பார்வையாளர்கள் சந்தேகிக்கிறார்கள். ஹும் தமிழக அரசின் லட்சணங்களை இறந்தவர்களின் கல்லறையில்தான் எழுதி வைக்க வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios