Asianet News TamilAsianet News Tamil

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பால் முதல்வர் எடப்பாடி அவசர ஆலோசனை!

ஸ்டெர்லைட் நிர்வாகப் பணிகளுக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்த நிலையில் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

sterile decision favor CM Edappadi urgent advice!
Author
Chennai, First Published Aug 12, 2018, 1:52 PM IST

ஸ்டெர்லைட் நிர்வாகப் பணிகளுக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்த நிலையில் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். sterile decision favor CM Edappadi urgent advice!

முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு அப்போது நடந்த தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ம் தேதி அரசாணை வெளியிட்டு ஆலை மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.sterile decision favor CM Edappadi urgent advice!

அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளதால், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், ஆலை மூடப்பட்டதால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து காப்பரை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், எனவே ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா குழுமம் சார்பில் வாதிடப்பட்டது. sterile decision favor CM Edappadi urgent advice!

இதையடுத்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் வாதத்தை நிராகரித்து மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள  அனுமதி வழங்கியது. ஆனால் உற்பத்தி, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கூடாது என பசுமை தீர்பாயம் கூறியுள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் நிர்வாகப் பணிகளுக்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios