ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையானவர்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை - மத்திய அரசு!

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையானவர்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது

Steps taken to send those acquitted in Rajiv gandhi murder case smp

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவர் கைது செய்யப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்தனர்.

இதனிடையே, பேரறிவளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கின் அடிப்படையில் அதனை முன்னுதாரணமாக கொண்டு மற்ற ஆறு பேரும் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் இவர்களில் 4 பேர் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தாங்கள் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதால் திருச்சி சிறப்பு முகாமி தங்க வைக்கப்பட்டுள்ள தனது கணவர் முருகனை அங்கிருந்து விடுவிக்க வேண்டும் என அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தபோது, ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான இலங்கையை சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை இலங்கைக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  மத்திய அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

பிற மொழிகளை இழிவுபடுத்தும் அமித் ஷா: உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!

அவர்கள் 4 பேரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு இலங்கை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios