NEET: நீட் எனும் பிணியை அழித்தொழிக்க கரம்கோப்போம்.!!நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை- ஸ்டாலின்

கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Stalin said that the day to abolish NEET is not far kak

நீட் தேர்வு - மதிப்பெண்கள் குளறுபடி

720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். எனவே விடைத்தால் மதிப்பீட்டில் முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

 இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலை தள பதிவில், சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், 

 

அதிகாரம் குவிந்து கிடப்பதே காரணம்

கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன. இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்:

  • நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை.
  • அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை.
  • சமூகநீதிக்கு எதிரானவை.
  • தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.

NEET எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை! என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Ramadoss : நீட் மதிப்பெண் குளறுபடிகள்.!! பயனற்ற நுழைவுத்தேர்வுக்கு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும்! -ராமதாஸ்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios