Asianet News TamilAsianet News Tamil

தோல்வி பயத்தால் மத உணர்வை தூண்டிவிடும் மோடி.. வெறுப்பு பேச்சை காதில் வாங்காத தேர்தல் ஆணையம்- விளாசும் ஸ்டாலின்

தனது தோல்விகளுக்கு எதிரான மக்களின் கோபத்துக்கு அஞ்சி, மத உணர்ச்சிகளைத் தூண்டி, வெறுப்புப் பேச்சின் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்வியைத் தவிர்க்கப் பார்க்கிறார் மோடி என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்
 

Stalin accused the Election Commission of ignoring Modi's hate speech KAK
Author
First Published Apr 23, 2024, 9:23 AM IST

இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது பேசிய பிரதமர மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது.

இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது என சர்ச்சையான வகையில் பேசியிருந்தார். இந்த பேச்சு நாடு முழுவதும் எதிர்ப்பு ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டது. இந்தநிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலை தள பதிவில், 

Stalin accused the Election Commission of ignoring Modi's hate speech KAK

காதில் வாங்காத தேர்தல் ஆணையம்

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நச்சுப் பேச்சு இழிவானதும் மிகவும் வருத்தத்திற்குரியதும் ஆகும்.  தனது தோல்விகளுக்கு எதிரான மக்களின் கோபத்துக்கு அஞ்சி, மத உணர்ச்சிகளைத் தூண்டி, வெறுப்புப் பேச்சின் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்வியைத் தவிர்க்கப் பார்க்கிறார் மோடி. வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் அசலான உத்தரவாதங்கள்.

அவரது இத்தகைய அப்பட்டமான வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சைக் காதில் வாங்காதது போல் இருக்கும் தேர்தல் ஆணையம் நடுநிலைமை என்பதன் சுவடே இன்றி அப்பண்பையே கைவிட்டுள்ளது. இந்தியா கூட்டணி வாக்குறுதியளித்துள்ள சமூக-பொருளாதார மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது சமத்துவச் சமுதாயத்தை உருவாக்குவதற்கான வழிமுறையாக நெடுநாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்ததாகும். 

Stalin accused the Election Commission of ignoring Modi's hate speech KAK

பாஜகவின் திசைதிருப்பும் தந்திரங்கள்

அதற்குத் தவறான பொருள் கற்பித்து, பின்தங்கிய வகுப்பினருக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் ஆகியவற்றில் உரிய பங்கு கிடைக்கவிடாமல் செய்கிறார் பிரதமர் மோடி. இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பாஜகவின் வஞ்சகமான திசைதிருப்பும் தந்திரங்களைப் பற்றி கவனமாக இருக்கவேண்டும். மோடியின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்தும் நமது முயற்சிகளை மேலும் உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அரசியலுக்காக வெட்கமே இல்லாமல் போலி மதசார்பின்மை பேசும் ஹிந்து விரோத ஸ்டாலின்! மோடியை விமர்சிப்பதா?பாஜக விளாசல்
 

Follow Us:
Download App:
  • android
  • ios