பணியாளர் தங்கும் விடுதி மத்திய அரசு நிதியா? அண்ணாமலைக்கு பதில் கொடுத்த FACT CHECK
தமிழகத்தில் புதிய சிப்காட் மெகா குடியிருப்பு திறக்கப்பட்டதையடுத்து, அதன் நிதியுதவி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசின் பங்களிப்பை முதல்வர் மறைப்பதாக குற்றம் சாட்டிய நிலையில், தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கமளித்துள்ளது.
பணியாளர் தங்கும் விடுதி
இந்தியாவில் தொழிற்சாலைகளில் பெண் பணியாளர்கள் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், வல்லம்-வடகாலில் திறக்கப்பட்டுள்ள தங்கும் விடுதி, மத்திய அரசின் நிதி 37 கோடியே 44 லட்ச ரூபாய் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து 498 கோடி கடன்பெற்று கட்டப்பட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் மகளிர் தங்கும் விடுதி திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு நிதியை குறிப்பிடாமல் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுமென்றே மறைத்துவிட்டாரா கேள்வி எழுப்பயிருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழுவான FACT CHECK வெளியிட்டுள்ள தகவலில்,
செய்தி
'ரூ.707 கோடி செலவில் கட்டப்பட்ட வல்லம்-வடகலில் உள்ள 18,720 படுக்கைகள் கொண்ட பணியாளர் தங்குமிடத்திற்கு மத்திய அரசின் மானியம் ரூ.37.44 கோடி மற்றும் பாரத் ஸ்டேட் வங்கியில் இருந்து ரூ.498கோடி கடன் பெறப்பட்டுள்ளது' என்று அண்ணாமலை பதிவிட்டு இருக்கிறார்.
உண்மை என்ன?
இத்திட்டத்திற்கு சிப்காட் பங்களிப்பு ரூ.171.06 கோடி, ஒன்றிய அரசின் ARHC மானியம் ரூ.37.44 கோடி, எஸ்பிஐ கடன் ரூ.498 கோடி. இதில் எஸ்பிஐ வங்கி கடன் சிப்காட் தரப்பால் திருப்பி செலுத்தப்படும். ஆக, சிப்காட் உடைய பங்கு ரூ.669.06 கோடி. மேலும், இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் தரப்பில் முதல் தவணை மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Heavy Rain : இன்றும் நாளையும் மிக கனமழைக்கு எச்சரிக்கை.! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா.?