sslc results released

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.4 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 8ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிவடைந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினர். இதில், 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்களும் 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவிகளும் தேர்வு எழுதினர்.

இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேரும் எழுதியுள்ளனர்.இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்விலும் மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்களுக்கான பட்டியல் வெளியாகாது எனவும், கிரேடு முறையில் அறிவிக்கப்படும் எனவும் பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 94.4 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

92.5 % மாணவர்களும், 96.2 % மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழ் பாடத்தில் 69 பேர் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

கணிதத்தில் 13759 பேர் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.அறிவியல் பாடத்தில் 17481 பேர் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

சமூக அறிவியலில் 61115 பேர் 100 க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.