10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்டம் மார்க் வாங்கியவர்கள் எத்தனை பேர்? பாட வாரியான தேர்ச்சி சதவிகிதம் எவ்வளவு?

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ம் தேதி வெளியானதை தொடர்ந்து 10 ம் வகுப்பு  பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகியுள்ளது. இதில், ஒட்டுமொத்த தேர்ச்சி 91.55% விகிதமாகும். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

SSLC 10th Result 2024...Subject wise pass percentage tvk

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இதில் 4,105 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ம் தேதி வெளியானதை தொடர்ந்து 10 ம் வகுப்பு  பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகியுள்ளது. இதில், ஒட்டுமொத்த தேர்ச்சி 91.55% விகிதமாகும். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மாணவிகள் 4,22,591 தேர்வாகியுள்ளனர். இது 94.54 சதவீதமாகும். மாணவர்கள் 3,96,152 தேர்வாகியுள்ளனர். இது 88.58 சதவீதம் தேச்சியாகும். குறிப்பாக  4,105 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில், அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 1,364 என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று தமிழ் பாடத்தில் 8 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும், கணித பாடத்தில் 20,691 பேரும், அறிவியல் பாடத்தில் 5,104, சமூக அறிவியலில் 4.428 பேரும் முழுமையான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: Public Exam Result: தேனியில் பொதுத்தேர்வில் 494 மதிப்பெண் எடுத்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை

அரியலூர் மாவட்டம் 97.31 தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 4105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 87.90 சதவீத அரசுப்பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளன.

பாடவாரியாக தேர்ச்சி விகிதம் 

SSLC 10th Result 2024...Subject wise pass percentage tvk
100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை

SSLC 10th Result 2024...Subject wise pass percentage tvk

தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 13510, இதில், தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 12,491 பேர்(92.45%)

தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 260. இதில், தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 228(87.69%)

இதையும் படிங்க:  RE EXAM: 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு தேர்வு எப்போது.? மார்க் சீட் எப்போது கிடைக்கும்.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios