மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தின் மீதேறி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி சென்றனர்.

அரியலூர் மாவட்டத்தைச்  சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் இந்த போராட்டம் மிக வலுவாக நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அங்கு போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஏ.ஐ.எஸ்.எஃப் உள்ளிட்ட மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோயில் கோபுரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டு சென்றனர்.