Sri Lankan boat trapped in Tamils in the middle of the sea Rs 2 lakh worth damaged web damage
இராமநாதபுரம்
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் வலையில் இலங்கை படகு ஒன்று சிக்கியது. படகு வலையில் சிக்கியதால் ரூ.2 இலட்சம் மதிப்புள்ள வலை சேதமடைந்தது என்று மீனவர்கள் கவலைத் தெரிவித்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் ரொனால்டோ என்பவருக்குச் சொந்தமான ஒரு விசைப்படகில் ஐந்து மீனவர்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவிற்கும் – தனுஷ்கோடிக்கும் இடையே நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீனவர்களின் வலையில் அதிக எடை கொண்ட ஒரு பொருள் சிக்கியது. அதை அருகில் சென்று பார்த்தபோது, வலையில் பிளாஸ்டிக் படகு ஒன்று சிக்கி இருந்தது.
அந்த படகைக் கரைக்குக் கொண்டுவந்த மீனவர்கள், மத்திய – மாநில உளவுப்பிரிவு மற்றும் கடலோர காவலாளர்களிடம் ஒப்படைத்தனர். அந்தப் படகு இலங்கையைச் சேர்ந்த பிளாஸ்டிக் படகு என்பதும், அதை அந்த நாட்டு மீனவர்கள்தான் பயன்படுத்துவார்கள் என்பதும் தெரிந்தது.
இதனையடுத்து காவலாளர்கள், இலங்கை மீனவர்கள் யாரேனும் மீன் பிடிக்க வந்தபோது கடல் கொந்தளிப்பால் படகு கடலில் மூழ்கியதா? அல்லது கடத்தல்காரர்கள் யாரேனும் கடத்தல் பொருட்களுடன் வந்தபோது படகு கடலில் மூழ்கியதா? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பிளாஸ்டிக் படகு வலையில் சிக்கியதால் ரூ.2 இலட்சம் மதிப்புள்ள வலைகள் சேதம் அடைந்தது என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
