ராமர் கோயில் திறக்கப்படும் நாளில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் செய்ய தடையா? தமிழக அறநிலையத்துறை விளக்கம்.!

தமிழக கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்ச்சியையும் நடத்த அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. 

Special worship, alms giving prohibited in Tamil Nadu? HRCE Department Explanation tvk

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் நாளை பூஜை மற்றும் அன்னதானம் செய்ய அறநிலையத்துறை அனுமதி மறுத்துள்ளதாக வெளியான தகவல் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் புனித நகரங்களில் ஒன்றான அயோத்தியில் நாளை ராமர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்ச்சியையும் நடத்த அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும் காவல்துறையினர் தடுப்பதாகவும் கூறப்பட்டது.

இதையும் படிங்க;- யாரை திருப்திபடுத்த இந்த பிரிவினை முயற்சியில் ஈடுபடுறீங்க! இந்து மத மக்களை சீண்டி பாக்காதீங்க! அண்ணாமலை..!

ஒட்டு மொத்த நாடே அயோத்தி விழாவை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் இந்து சமய அறநிலையத்துறை இப்படி தடை விதித்து இருப்பது, பக்தர்களை மட்டுமின்றி கோவில் நிர்வாகிகளையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக தரப்பில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் ஆலய நடைமுறைகளில் தேவையில்லாமல் தலையிடவோ, வழிபடும் முறைகளில் குறுக்கிடவோ திமுக அரசுக்கு எந்த உரிமையுமில்லை என கூறி கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இதையும் படிங்க;-  ராமர் கோயில் திறக்கப்படும் நாளில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடத்த தடை விதிப்பதா? சீறும் வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக இந்து அறநிலைத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் நாளை பூஜை செய்ய அறநிலையத்துறை அனுமதி மறுத்துள்ளதாக வெளியான தகவல் தவறானது. அதுபோன்று எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios