மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி விரைவாக நிறைவேற்றி வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை குறிச்சிகுளத்தை பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இக்குளம் தூர்வாரப்பட்டு விரைவில் படகுகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.

சென்னையில் மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கோவையிலும் மெட்ரோ ரயில் தொடங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தில் ஜெயலலிதா கொண்டுவந்த மகத்தான திட்டங்களை  எடப்பாடி பழனிசாமி விரைவாக நிறைவேற்றி வருகிறார் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.