சின்ன சின்ன பெண் குழந்தைகளையும் மது குடிக்க வைத்தது தான் திமுக அரசின் சாதனை என சாடியுள்ள சௌமியா அன்புமணி மது குடிப்பதில் விழுப்புரம் முதல் மாவட்டமாக இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் என்னைத் தவிற என் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள் என உத்தரவாதம் அளித்து கட்சியை வளர்த்தவர் ராமதாஸ். ஆனால் கால சூழல் காரணமாக அவரது மகன் அன்பமணியை கட்சிக்குள் முன்னிலைப்படுத்தும் தேவை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணியின் மனைவி சௌமியா அன்பமணி தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். சௌமியா போட்டியிட்டதை ராமதாஸ் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் விளைவாக தற்போது கட்சியே இரண்டாக செயல்படும் நிலை உருவாகியுள்ளது.
தமிழக மகளிர் உரிமை மீட்பு
இந்த நிலையில் அன்புமணியின் செல்வாக்கை அதிகப்படுத்தும் முனைப்பில் சௌமியாவும் அரசியல் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கி உள்ளார். அந்த வகையில் அண்மையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் நடைபெற்ற தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணத்தில் சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். பெண்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “நமது வீடுகளில் உள்ள சின்ன சின்ன பெண் குழந்தைகளையும் மது குடிக்க வைத்தது தான் திமுக அரசின் சாதனை. பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததும் குழந்தைகள் மது குடிக்கும் வீடியோ வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது.
வீதிக்கு வீதி மதுக்கடைகள்
தமிழக அரசு வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறந்து வைத்துள்ளது. ஒரு காலத்தில் தமிழகத்தில் 37500 அரசுப்பள்ளிகளில் 75 லட்சம் மாணவர்கள் படித்து வந்தனர். ஆனால் தற்போது வெறும் 45 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அதே நேரத்தில் வெறும் 12500 தனியார் பள்ளிகளில் 65 லட்சம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இலவசமாக கல்வி வழங்கும் அரசுப் பள்ளிகளை விட்டுவிட்டு ஆயிரக்கணக்கில் செலவு பணம் வாங்கும் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர். மேலும் மாணவர்கள் வரவில்லை என்று 208 பள்ளிகளை அரசு மூடியுள்ளது.
பள்ளிகளை மூட கல்வித்துறைக்க இரு அமைச்சர்கள்..?
பள்ளிகளை நடத்த அரசுக்கு திறமையில்லை. திறமையான ஆசிரியர்கள், தரமான கல்வியை வழங்கினால் மக்கள் ஏன் தனியார் பள்ளிகளுக்கு செல்லப் போகிறார்கள்? இதற்கு எதற்காக இரண்டு அமைச்சர்கள்? கல்விக்கு என இரு அமைச்சர்கள் இருக்கின்றனர். பள்ளிகளை மூடுவது தான் இவர்களின் வேலையா? முறையாக கல்வி வழங்க முடியாது, வேலை வாய்ப்ப வழங்க முடியாது, வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரமாட்டீர்கள், வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து குடும்பத்தை அழிப்பது தான் உங்கள் வேலையா? இது நியாயமா?
மக்களை ஏமாற்றும் ஆட்சியாளர்கள்
இப்படி அனைவரையும் ஏமாற்றிவிட்டு தேர்தல் வந்ததும், நாங்கள் மதுவை ஒழித்துவிடுவோம், டாஸ்மாக் கடைகளை மூடி விடுவோம், போதைப் பொருட்களை ஒழித்துவிடுவோம் என்று ஏன்று ஏமாற்றுவார்கள். இனியும் ஏமாறத் தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் பிரசவ வலியால் துடிக்கம் போது உங்கள் வீடுகளுக்கு விரைந்து வரும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் அன்பமணி, அரசு மருத்துவமனைகளில் ஒரு ஊசியை ஒருவருக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டவர் அன்பமணி” என உணர்ச்சிப்பொங்கப் பேசினார்.


