Asianet News TamilAsianet News Tamil

சோபியாவுக்கு ஜாமீன்... 30 நிமிடத்தில் விடுதலை செய்ய தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!

தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக விமானத்தில் கோஷமிட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த் பெண் சோபியாவுக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. சோபியாவின் தந்தை சார்பில் அளிக்கப்பட்டிருந்த மனுவில் விசாரணை மூலமாக சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Sophia bail
Author
Tamil Nadu, First Published Sep 4, 2018, 12:02 PM IST

தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக விமானத்தில் கோஷமிட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த் பெண் சோபியாவுக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. சோபியாவின் தந்தை சார்பில் அளிக்கப்பட்டிருந்த மனுவில் விசாரணை மூலமாக சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 Sophia bail

முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில், பா.ஜ.க. தலைவர் தமிழிசையை பார்த்ததும், அதே விமானத்தில் பயணித்த மருத்துவ மாணவி சோபியா, திடீரென பா.ஜ.க. ஒழிக என்று முழக்கமிட்டார். இதனால் ஆவேசமடைந்த தமிழிசை, விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். விசாரணையில், மாணவி சோபியா கனடாவில் படித்து வருவதும், அவர், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவரின் மகள் என்பதும் தெரிய வந்தது. Sophia bail

புகாரின் பேரில் சோபியாவை கைது செய்த போலீசார், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் நிபந்தனையின்றி சோபியாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மகளுக்கு அறிவுரை கூறுமாறு பெற்றோருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios