சமூக செயற்பாட்டாளர் ஆசிம் வெளிமன்னா.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் டக்கராக ஒரு செல்ஃபி!
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை, மாற்றுத்திறனுள்ள குழந்தைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சமூக செயற்பாட்டாளர் திரு. ஆசிம் வெளிமன்னா அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் தான் திரு. ஆசிம் வெளிமன்னா அவர்கள், இவருடைய பெயரிலேயே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஒரு அறக்கட்டளை நடத்தப்பட்டு வருகிறது. 90 சதவீதம் உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்ட ஆசிம், இரு கைகள் இல்லாமல் பிறந்தவர். தாடை எலும்பு வளைந்து, பற்கள் வாய் மற்றும் செவிப்புலன் ஆகியவற்றில் அவருக்கு பல பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இருப்பினும் தனது உடல் குறைபாட்டை பற்றி சற்றும் கவலைப்படாமல் தன்னைப் போன்று உள்ள பல குழந்தைகளுக்காக இவர் தொடர்ச்சியாக போராடி வருகிறார். யூனிசெப் வழங்கும் குழந்தை சாதனையாளர் விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவுக்கு நியாபகம் இருக்கா? அண்ணாமலை கேள்வி!
உஜ்வாலா பாலியம் விருது இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது, அதேபோல ஊக்கமளிக்கும் இந்தியா விருதும் கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னையில் குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் மாண்புமிகு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார் அசிம்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலி அவர்கள் வெளியிட்ட பதிவில் "கோழிகோடை சேர்ந்த தம்பி அசிம், தன்னை போலவே மாற்றுத்திறன் உள்ள குழந்தைகளின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதன் மூலம் உலக அளவில் அறியப்படுகிறார். அதன் மூலம் பல்வேறு அங்கீகாரங்களை பெற்று வருகிறார்."
"சென்னை வருகை தந்துள்ள தம்பி வெளிமுன்னா அவரது குடும்பத்தாருடன் இன்று நம்மை சந்தித்து அன்பை வெளிப்படுத்தினார். மாற்று திறனாளிகளின் நலம் சார்ந்து அவர் எடுத்து வரும் முன்னெடுப்புகளை கேட்டு அறிந்து. அவருடைய பணிகள் சிறக்க வாழ்த்தினோம்" என்று தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.