சரசரெவன வந்து இருசக்கர வாகனத்தில் புகுந்த சாராபாம்பு.. துணிச்சலாக பிடித்து இளைஞர் என்ன செய்தார் தெரியுமா?

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ஹசன்பூரா பகுதியை சேர்ந்த இளைஞர் ரிஸ்வான் அரவிந்த் (20). இவர் தனது இருசக்கர வாகனத்தை தேநீர் கடையில்  நிறுத்திவிட்டு தேநீர் அருந்த சென்றுள்ளார்.

Snake entered the bike in Ranipet  tvk

ஆற்காடு அருகே இருசக்கர வாகனத்தில் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரப்பாம்பை துணிச்சலாக இளைஞர் பிடித்து வனப்பகுதியில் விட்டார். 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ஹசன்பூரா பகுதியை சேர்ந்த இளைஞர் ரிஸ்வான் அரவிந்த் (20). இவர் தனது இருசக்கர வாகனத்தை தேநீர் கடையில்  நிறுத்திவிட்டு தேநீர் அருந்த சென்றுள்ளார். திரும்பி மீண்டும் வந்து இருசக்கர வாகனத்தை எடுக்க முற்பட்டபோது 8 அடி நீளமுள்ள சாராபாம்பு இருசக்கர வாகனத்தின் என்ஜின் பகுதியில் உள்ளே இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதையடுத்து அதே பகுதியில் வசிக்கும் அசேன் என்ற இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இருந்த சாரப் பாம்பை துணிச்சலாக வாகனத்திலிருந்து வெளியே எடுத்துள்ளார். பின்னர், அதே பகுதியில் உள்ள காப்புக்காடு வனப்பகுதியில் விட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios