ஏ.டி.எம். மெஷினில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்த, வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களைத் திருடும் கும்பலை பொதுமக்கள் பிடித்து போலீசில் பிடித்து கொடுத்துள்ள சம்பவம் தாம்பரத்தில் நடந்துள்ளது.

சென்னை, தாம்பரம், காந்தி சாலையில் தனியார் வங்கி ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்-ல் பணம் எடுக்க பொதுமக்கள் சென்றனர். அப்போது, ஏடிஎம் மிஷின் அருகே இரண்டு பேர் நீண்டநேரமாக நின்று கொண்டிருந்தனர்.

இதனால், வெளியில் இருந்த பொதுமக்கள் பணம் எடுப்பதர்கவே அவர்கள் கருதினர். ஆனால், அவர்கள் ஏடிஎம் மிஷினில் இருந்து எதையோ ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் சந்தேகப்பட்டு, உடனடியாக ஏடிஎம் மையத்தின் ஷட்டரை பொதுமக்கள் பூட்டினர். இதனால்
அவர்கள் வெளியே ஏடிஎம் மையத்துக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதன் பிறகு, அவர்கள் தாம்பரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஏடிஎம் மையத்துக்குள் சிக்கியிருந்தவர்கள் மீட்டனர். பின்னர், அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இது குறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், ஏடிஎம் மையத்துக்குள் இரண்டு பேர் சந்தேகப்படும்படியாக இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக நாங்கள் அங்கு சென்றோம். அதற்குள் ஏடிஎம் மையத்தின் ஷட்டரை பொதுமக்கள் பூட்டிவிட்டனர்.பின்னர், ஏடிஎம் மையத்துக்குள் இருந்த இரண்டு
பேரை பிடித்து விசாரித்தோம். அவர்கள் இருவரும் நெல்லையைச் சேர்ந்த சுல்தான், சுலைமான் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் ஏடிஎம் மிஷினில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, ஏடிஎம் கார்டுகளின் ரகசிய தகவல்களைத் திருடியுள்ளனர். அதன் மூலம் போலி கார்டுகளைத் தயாரித்து, பணத்தையும் சுருட்டியுள்ளனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வருகிறோம் என்று கூறினார்.