ஆளுநர், அண்ணாமலை, குஷ்பூவை தரக்குறைவாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அதிரடியாக கைது!!

தொடர்ந்து சர்ச்சையாக பேசி வரும் திமுக மேடை பேச்சாளார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Sivaji Krishnamurthy was arrested by Tamil Nadu police

திமுக மேடை பேச்சாளார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் நேற்று பேசி இருந்தார். அப்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகையும், பாஜக தலைவருமான குஷ்புவை தரைக்குறைவாக பேசி இருந்தார். இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவின் இருந்து நீக்கம் செய்யபட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்கு குஷ்பு கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தார். இதையடுத்து கொடுங்கையூர் போலீசார் தாமாக முன் வந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்திமீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பெண்களை அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் மேடை பேச்சாளராக இருந்து வருபவர் சிவாஜி கிருஷமூர்த்தி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கினார். சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்று இருந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக தாக்கிப் பேசி இருந்தார். இதையடுத்து இவருக்கு பல தரப்புகளில் இருந்தும் கண்டனம் எழுந்தது. 

இதையடுத்து இவரை கட்சியில் இருந்து திமுக தலைமை நீக்கியது. கடந்த மே மாதத்தில்தான் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்என் ரவி, குஷ்பூ, அண்ணாமலை ஆகியோரை கடுமையாக தரக்குறைவாக விமர்சித்து இருந்தார். இந்த வீடியோவை பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி டுவிட்டரில் பகிர்ந்து இருந்தார்.

இதையடுத்து பல தரப்புகளிலும் இருந்து திமுகவுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன. குஷ்புவும் பேட்டி அளித்து இருந்தார். அப்போது கண்கலங்கிய குஷ்பு, ''பெண்களை கேவலமாக பேசுபவர்கள் தங்களின் தாயின் வளர்ப்பை கேவலப்பத்துகிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். நான்கு ஆண்கள் சேர்த்து கொண்டு பெண்கள் தங்களை இழிவாக பேசிவிடக் கூடாது என்று நினைக்கின்றனர். பெண்களை இழிவாக பேசுவதற்கு இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது.

எப்படிப்பட்ட ஆண்களுடன் வசித்து வருகிறீர்கள் என்று வீட்டில் இருப்பவர்கள் நினைத்துப் பாருங்கள். இதுதான் திராவிடக் கழகத்தின் மாடல். திராவிடக் கழகம் இவர்களுக்கு தீனி போட்டு வளர்க்கிறார்கள். எனக்கு சந்தேகம் வருகிறது. முதல்வர் உள்பட அனைவரும் கதவுக்குப் பின்னால், இதுபோன்ற பேச்சுக்களை சிரித்து ரசிக்கின்றனர் என்று நினைக்கிறேன். இவர்களது குடும்பத்தில் இருப்பவர்களை  பேசினால், எங்கிருந்தாலும் புடவை புடித்து இழுக்க வந்துவிடுவார்கள். நான் இதை அனுபவித்து இருக்கிறேன். திமுக இனிமேல் இதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 

குஷ்புவை சீண்டிப் பார்க்காதீர்கள். குஷ்புதானே என்று நினைக்க வேண்டாம். குஷ்புதானே மன்னித்துவிடுவாள். ஆனால், மறக்கமாட்டாள். ஸ்டாலின் அவர்களே உங்களது கட்சியில் இருக்கும் அனைவருக்கும் சொல்கிறேன். சீண்டிப் பார்க்காதீர்கள். மேடை நாகரீகம் என்று இருக்கிறது. இதை நிறுத்தவும் முதல்வர் அவர்களே. அடிக்கும் தைரியம் எனக்கு இருக்கிறது.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios