Silver goods worth Rs 10 lakh confiscated in chennai
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூருக்கு கடத்தப்படவிருந்த 25 கிலோ வெள்ளிப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மேற்கு மாம்பலம், பிருந்தாவனம் நகரைச் சேர்ந்தவர் தாமோதர் குப்தா. நகை வியாபாரியான குப்தா, இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

சோதனையில் வெள்ளிப் பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
இது குறித்து குப்தாவிடம் விசாரித்தபோது, வெள்ளிப் பொருட்களை மைசூருக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, தாமோதர் குப்தா கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடம் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ வெள்ளிப் பொருட்களையும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிப் பொருட்களை, கமர்சியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தாமோதர் குப்தாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
