"அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

தீவிரமாக விசாரிக்கவும் மேல்நடவடிக்கை எடுக்கவும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Shocked and saddened: CM MK Stalin on Kallakurichi liquor deaths sgb

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புடையவர்களை கைது செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

"இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்" எனவும் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளசாராய விவகாரம்: அரசு அதிகாரிகளை கூண்டோடு தூக்கிய தமிழ்நாடு அரசு!

இது குறித்து தீவிரமாக விசாரிக்கவும் மேல்நடவடிக்கை எடுக்கவும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் இருவரும் இந்த விவகாரம் பற்றி ஆய்வு நடத்த கள்ளக்குறிச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நான்கு மருத்துவர்கள் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவும் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் கள்ளச்சாராயப் புழக்கம் அதிகரித்துள்ளதாக விமர்சித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உயிரிந்தது அதிர்ச்சி அளிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

நிர்மலா சீதாராமனை அசிங்கமாகப் பேசிய இவர் மீது நடவடிக்கை எடுக்கணும்: அண்ணாமலை, செஷாத் வலியுறுத்தல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios