நிர்மலா சீதாராமனை அசிங்கமாகப் பேசிய இவர் மீது நடவடிக்கை எடுக்கணும்: அண்ணாமலை, செஷாத் வலியுறுத்தல்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்து பேசியவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார். பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் செஷாத் ஜெய் ஹிந்து் அண்ணாமலையின் பதிவை ரிடீவீட் செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்துப் பேசியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார். பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் செஷாத் ஜெய் ஹிந்தும் நிர்மலா சீதாராமனுக்கு எதிரான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக பிரமுகர் ஒருவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவரது பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்துப் பேசியுள்ளார். அவரது பேச்சின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நிர்மலா சீதாராமன் குறித்து திமுக பேச்சாளர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார் என்றும் திமுகவினர் இதையே வாடிக்கையாக செய்துவருகிறார்கள் என்றும் பாஜகவினர் குறை சொல்கின்றனர். இந்நிலையிர், பாஜக தலைவர்களும் நிர்மலா சீதாராமன் குறித்து பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்து பேசியவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார். பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் செஷாத் ஜெய் ஹிந்து் அண்ணாமலையின் பதிவை ரிடீவீட் செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அண்ணாமலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "பாஜகவின் பெண் தலைவர்களை இழிவுபடுத்தும் கருத்துக்களைக் கூறி, பிழைப்பு நடத்துபவர்களுக்கு மட்டுமே மேடையில் இடம் கொடுப்பதை திமுக வழக்கமாக வைத்துள்ளது. இந்த மோசமான அணுகுமுறை இந்த அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படுகிறது. பாஜக தொண்டர்களை அவர்களின் சமூக ஊடக பதிவுகளுக்காக கைது செய்ய எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். ஆனால் இது போன்ற அசிங்கங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை" எனக் கூறியுள்ளார்.
மேலும், "நிர்மலா சீதாராமன் குறித்த கருத்துகளை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது, மேலும் இந்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறையிடம் கோரிக்கை வைக்கிறோம்" என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.