அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் இன்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 
நடத்தப்பட்ட சோதனையின்போது சீல் வைக்கப்பட்ட அறைகளைத் திறந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியைச் சேர்ந்தவர் எஸ்.பி.கே.செய்யாதுரை. இவர் அரசு ஒப்பந்ததாரராக 
இருந்து வருகிறார். அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை மற்றும் அவரது உறவினர் வீடுகளில் கடந்த ஜூலை மாதம் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. 4 நாட்களாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அப்போது ஏராளமான பணம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது, செய்யாதுரை வீட்டில் ஒரு அறையை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  இந்த நிலையில், ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் இன்று மீண்டும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட சோதனையின்போது சீல் வைக்கப்பட்ட அறைகளை திறந்து மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.