இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23-ம் புலிகேசி பழனிசாமி: அமைச்சர் செந்தில் பாலாஜி!
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23-ம் புலிகேசி எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்டி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். இந்த நிலையில் தான் ஈவிகேஸ் இளங்கோவன் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டு 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
திருச்செந்தூர் கோவிலில் 6மணி நேரத்திற்கு மேலாக அடைத்து வைக்கப்பட்ட பக்தர்கள்!
ஆனால், இந்த தேர்தலை அதிமுக மற்றும் பாஜக போன்ற முக்கிய கட்சிகள் புறக்கணித்துள்ளன. நேற்று முன் தினம் வரையில் 9 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். திமுக சார்பில் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல் செய்தார். இதே போன்று நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை அமாவாசை என்று குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது: ‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்..
'ஒரே குடும்பம்' தான் திமுகவின் 'ஒரே கொள்கை'; போட்டுத் தாக்கிய வானதி சீனிவாசன்!
அமைதிப்படை படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் ‘அமாவாசை’ கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி. பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த பழனிசாமி, '’திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது என நேற்று பேசியிருக்கிறார். ஆட்சியை இழந்த இந்த நான்கு ஆண்டுக் காலத்தில் அமாவாசையையென உருட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி. ’’2024-ம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள் மட்டுமே ஸ்டாலின் முதலமைச்சராக இருக்க முடியும். மீண்டும் அதிமுக அரசு தமிழகத்தில் அமையும் 2022 பிப்ரவரி 12. சேலம், தாரமங்கலம். இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே திமுக அரசு ஆட்சியில் இருக்கும்’’ - 2024 ஜனவரி 25. எக்ஸ் தள பதிவு. திமுக ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள்தான். நாட்கள் எண்ணப்படுகின்றன. 2024 செப்டம்பர் 20. X தளப்பதிவு.
மீண்டும் ஆரஞ்ச் அலர்ட்.! இந்த மாவட்டங்களுக்கு இன்று மிக கன மழை - வானிலை மையம் எச்சரிக்கை
இப்படி ஒவ்வொரு அமாவாசைக்கும் பழனிசாமி கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். அமாவாசைகள்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறன. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23-ம் புலிகேசி பழனிசாமி, இன்னும் நூறு பெளர்ணமிகளுக்கு தளபதிதான் முதலமைச்சராக தொடர்வார் என்பதை 2026ல் உணர்ந்து கொள்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.