பஞ்சாயத்து ஓவர்; ஓசி டிக்கெட் பிரச்சினைக்கு முடிவு கட்டிய போக்குவரத்து, காவல்துறை செயலாளர்கள்
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்கள், காவல் துறையினரின் மோதலுக்கு இரு துறை செயலாளர்களும் தீர்வு கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாங்குநேரி நீதிமன்றம் அருகில் அரசுப் பேருந்தில் ஏறிய காவலர் ஒருவர் நான் சீருடையில் இருக்கிறேன் என்னால் டிக்கெட் எடுக்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் வாரண்ட் இல்லாமல் உங்களை இலவசமாக அழைத்துச் செல்ல முடியாது என நடத்துநரும் மல்லுகட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது. இது தொடர்பாக விளக்கம் அளித்த அரசு போக்குவரத்துக் கழகம் வாரண்ட் இல்லாமல் அரசுப் பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணிக்க அனுமதி கிடையாது என அறிவித்தது.
அச்சச்சோ என்ன இவ்ளோ ஆச்சாரமா பேசறேல்? காஞ்சியில் வீதிக்கு வந்த வடகலை, தென்கலை பிரச்சினை
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விதிகளை மீறியதாகக் கூறி அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவலர்கள் தொடர்ந்து அபராதம் விதித்து வந்தனர். அந்த வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில் நோ பார்க்கிங் பகுதியில் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டதற்காகவும், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே சீட் பெல்ட் அணியவில்லை என்ற குற்றத்திற்காக அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
63 கோடி பேருந்து நிலையம்; ஸ்டண்ட், ரேஸ் டிராக்காக பயன்படுத்தும் இளசுகள் - பொதுமக்கள் வேதனை
இரு துறை அதிகாரிகள், பணியாளர்கள் இடையேயான மோதல்கள் தொடர்ந்து வந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, உள்துறை செயலாளர் அமுதாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து இரு துறை பணியாளர்கள் இடையேயான மோதல் போக்குக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது. செயலாளர்களை தொடர்ந்து இரு துறை அதிகாரிகளுக்கும் இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு இனி இது போன்ற பிரச்சினைகள் தொடராது என தெரிவித்துள்ளனர்.