ரூ.63 கோடியில் புதிய பேருந்து நிலையம்; ஸ்டண்ட், ரேஸ் டிராக்காக பயன்படுத்தும் இளசுகள் - பொதுமக்கள் வேதனை

ஈரோட்டில் 63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்து நிலையத்தை பைக் ரேஸ் நிலையமாக பயன்படுத்தி வரும் இளைஞர்களின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

used the roads for bike and car race at erode new bus stand video goes viral vel

ஈரோட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, கரூர், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை, புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்குவதற்கு திட்டமிடப்பட்டது. 

இதற்காக அரசு ஒப்புதல் பெறப்பட்டு, 63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து,  சோலார் அருகில் உள்ள 13 ஏக்கர் பரபரப்பளவில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் கடந்த 2022ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த கட்டுமான பணிகளானது தற்போது 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறிவருகின்றனர். 

அச்சச்சோ என்ன இவ்ளோ ஆச்சாரமா பேசறேல்? காஞ்சியில் வீதிக்கு வந்த வடகலை, தென்கலை பிரச்சினை

இந்நிலையில், அப்பகுதியில் சிலர் பகல் மற்றும் இரவு நேரங்களில் மது அருந்தி வருவதால், பேருந்து நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல தற்போது, இளைஞர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஸ்டண்ட் மற்றும் பந்தய போட்டிகளை அப்பகுதியில் அரங்கேற்றி வருவது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த காட்சிகளை காணும் சமூக ஆர்வலர்கள், மக்களின் வரிப்பணம் வீணாகி வருவதாக குற்றம்சாட்டியுள்ளதோடு, கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios