sengottayan says there will be action to make teachers job permenant

அரசு பள்ளிகளில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 17 ஆயிரம் ஆசிரியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 17 ஆயிரம் ஆசிரியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கலைக்கல்லூரியில் நடைபெற்ற தியானப் பயிற்சி விழாவை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறினார். 

தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறந்தது என்ற நிலை விரைவில் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதம் தொறும் ஊதியம் வழங்கப்படும் என்றும், அவர்களை பணி நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார்.