விழுப்புரம் அருகே தனது இரண்டரை ஏக்கர் நிலத்தை உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு இடைத்தரகர் மூலம் அபகரித்து விட்டதாக செல்வராஜ் என்பவர் டிஐஜி அலுவலத்தில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரத்தை அடுத்த வேப்பூரை சேர்ந்தவர் செல்வராஜ். விழுப்புரம் அருகே இவருக்கு சொந்தமான 7 கோடி மதிப்பிலான இரண்டரை ஏக்கர் நிலம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செல்வராஜ் தனது இரண்டரை ஏக்கர் நிலத்தை உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு இடைத்தரகர் மூலம் அபகரித்து விட்டதாக விழுப்புரம் எஸ்.பி., மற்றும் டிஐஜி அலுவலத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், தனக்கு விழுப்புரம் அருகே 7 கோடி மதிப்பிலான இரண்டரை ஏக்கர் நிலம் இருந்ததாகவும், அதை உளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு அவரது மகன் நமச்சிவாயம் மகள் இலக்கியா ஆகியோர் இடைத்தரகர் ஒருவர் மூலம் போலி ஆவணங்களை கொண்டு அபகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.