தேர்தல் நேரத்தில் காங்கிரஸின் அதிரடி மூவ் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரானார் கு. செல்வப்பெருந்தகை!
Tamil Nadu Congress Committee President : நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஆகியுள்ளார் கு. செல்வப்பெருந்தகை.
நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக அதற்கான பணிகளை தொடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவராகவும் இருக்கின்ற கு. செல்வப்பெருந்தகை அவர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து ஏற்கனவே தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து வந்த கே. எஸ் அழகிரி அந்த பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் காங்கிரஸ் இணைந்த அதிரடி முடிவு மிகப் பெரிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் செல்வப்பெருந்தகை ஏற்கனவே வகித்து வந்த காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பதவியை சட்டமன்ற உறுப்பினரான ராஜேஷ் குமாருக்கு வழங்கப்பட உள்ளது என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது.
பணத்தை வைத்து தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது போன்ற மாய தோற்றத்தை காட்டுகிறது - அமைச்சர் ரகுபதி