தொழிலதிபரும், திருப்பதி தேவஸ்தான சென்னை மண்டல ஆலோசனை குழு தலைவரான சேகர் ரெட்டியின் வருங்கால மருமகனுக்கு நெஞ்சு வலி காரணமாக சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்

சேகர் ரெட்டி மருமகன் மரணம்

பிரபல தொழிலதிபரான சேகர் ரெட்டி தனது மகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மகன் சந்திரமவுலிக்கும் திருமணம் நிச்சயம் செய்தார். இதனையடுத்து அடுத்த மாதம் திருப்பதியில் இருவருக்கும் திருமண நடைபெறவுள்ள நிலையில், திருமணத்திற்கான ஏற்பாடுகளை இரு வீட்டார் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தனர்.

அண்ணாமலை வாட்ச் தேவையில்லாத ஆணி..! அவர் எதை கட்டினால் தமிழகத்திற்கு என்ன பயன்..? கே.எஸ்.அழகிரி

மாரடைப்பால் உயிரிழப்பு

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சேகர் ரெட்டியின் வருங்கால மருமகனான சந்திர மௌலிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்திர மெளலியை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரவில் எக்மோ சிகிச்சையானது அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடையாத நிலையில் இன்று காலை சந்திர மௌலி உயிரிழந்துள்ளார். இந்த தகவலை காவிரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும் சந்திரமெளலி தனது கண்ணை தானம் செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

மீண்டும் மரண பயத்தை காட்டும் கொரோனா.. தமிழகத்தில் நிலை என்ன?அமைச்சர் மா.சு பரபரப்பு தகவல்..!