Asianet News TamilAsianet News Tamil

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இரண்டாம் தாள் தேர்வு எப்போது? அறிவித்தது ஆசிரியர் தேர்வு வாரியம்!!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இரண்டாம் தாள் தேர்வு தேதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  

Second Paper Exam for Teacher Eligibility Test Announced by Teachers Recruitment Board
Author
First Published Jan 3, 2023, 7:25 PM IST

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இரண்டாம் தாள் தேர்வு தேதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  அரசின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2 ஆம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம் என்ற நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க: ஆதார் வேறு.. மக்கள் ஐ.டி வேறு.! மக்கள் ஐ.டி பற்றி விளக்கமளித்த அமைச்சர் மனோ தங்கராஜ்

இதை அடுத்து விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக ஏப்ரல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள் 1க்கு 2,30,878 பேரும்‌ மற்றும்‌ தாள் 2க்கு 4,01,886 பேரும்‌ என மொத்தமாக 6,32764 பேர் விண்ணப்பித்தனர்‌. இதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் அக்.14 முதல் 19 ஆம் தேதி வரை இரு வேளைகளில்‌ நடத்தப்பட்டது. கணினி வழியில் நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாள் ஜன.31 முதல் பிப்.12 ஆம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

இந்த கணினி வழித்‌ தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வை மேற்கொள்ள விரும்பும்‌ தேர்வர்கள்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணைய தளத்தில்‌ பயிற்சியினை மேற்கொள்ளலாம். இதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும்‌. அனைத்து தேர்வர்களும்‌ இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்‌. ஜனவரி மூன்றாம்‌ வாரத்தில்‌ தேர்வு கால அட்டவணை மற்றும்‌ அனுமதிச் சீட்டு‌ வழங்கும்‌ விவரம் அறிவிக்கப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios