தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான கனிம மணல் குடோன் மோசடியில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்தன. மேலும், வி.வி.மினரல்ஸ் நிறுவனம் விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்படுவதாகவும், புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பல இடங்களில் வி.வி.மினரல்ஸுக்குச் சொந்தமான குடோன்களுக்கு அண்மையில் சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், உள்ளூர் திட்டக்குழும அனுமதியின்றியும் விதிமுறைகளை மீறியும் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக அரசுக்கு புகார் சென்றது. இதைதொடர், கடந்த வாரம் கட்டிட உரிமையாளர் வைகுண்ட ராஜனுக்கு விளக்கம் கேட்டு, மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

அதற்கு, தனது கட்டிடம் உரிய விதிமுறைகளின் கட்டியுள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர், பதில் அளித்துள்ளார். ஆனால் அவை போலியான ஆவணங்கள் என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நெல்லை முருகன் குறிச்சி பகுதியில் உள்ள அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கும்படி கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வைகுண்ட ராஜனுக்கு சொந்தமான விவி டவர்ஸ் கட்டிடத்துக்கு சீல் வைக்க சென்றனர். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருந்த வைகுண்டராஜனின் ஊழியர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனா.

இதைதொடர்ந்து கலெக்டர் கருணாகரன், நேரடியாக சம்பவஇடத்துககு சென்றார். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அந்த கட்டிடத்துககு சீல் வைத்னர். இந்த நடவடிக்கையை எதிர்த்து, வைகுண்டராஜன் தரப்பு,  நீதிமன்றம் செல்ல முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.