Asianet News TamilAsianet News Tamil

#BREAKING: நல்ல செய்தி.. பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ரூ.75000..! விண்ணப்பிப்பது எப்படி..?

#BREAKING:பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு 75,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவரின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

School student Educational Scheme
Author
Tamilnadu, First Published Dec 2, 2021, 2:40 PM IST

#BREAKING:பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு 75,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவரின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மற்றும் மாணவிகளின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை இருவரில் எவரேனும் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவ மற்றும் மாணவியருக்குத் தமிழக அரசு சார்பில் ரூ.75000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 2005 ம் ஆண்டு தொடங்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறும் மாணவ மாணவிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியாக வழங்கப்பட்டது. பின்னர் இந்த உதவித்தொகை 2014 ம் ஆண்டு 50 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஓவ்வொரு ஆண்டும் இந்த திட்டத்திற்கென பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு வழங்கப்படும் நிதி உதவித் தொகையானது , பயனாளிகளான மாணவ மற்றும் மாணவியரின் வங்கி சேமிப்பு கணக்கில் வைக்கப்படும். இந்த உதவித் தொகையை 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த உதவித் தொகையின் அசல் மற்றும் வங்கியின் மூலம் பெறப்படும் வட்டித் தொகை, மாணவரிகளின் கணக்கிலேயே வரவு வைக்கப்படும். இவர்களின் உயர்கல்வி மற்றும் பராமரிப்பு தேவைகளின் போது இந்த தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த உதவித் தொகையைப் பெற இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ், உடற்கூறு சான்று, சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், புகைப்படம் போன்றவற்றோடு இதற்கான விண்ணப்பப் படிவத்தையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் பெற்று பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்க்ப்பட்டுள்ளது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios