பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி.. left and Right எந்த செயலும் பள்ளியில் கிடையாது.. அமைச்சர் உறுதி

பள்ளி வளாகங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளுக்கு எங்கும் அனுமதி கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் கோவையில் நடைபெற்ற சம்பவம் குறித்து முதன்மை கல்வி அலுவலரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும்  இனிமேல் இதுபோன்று நடைபெறக்கூடாது என அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

School Education Minister Anbil Mahesh reacts RSS camp in Corporation School


இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் உள்ள CBSE, ICSE பள்ளிகளில் ஆய்வு நடத்த உள்ளதாக கூறினார்.பள்ளிகளில் இடது சாரி, வலதுசாரி உள்ளிட்ட எந்த கருத்தியலும் நுழையக்கூடாது என்பதில் அரசு மிக உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். Right, Left உள்ளிட்ட எந்த இரு கருத்தியலும் நுழையக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது

அரசுப்பள்ளி மற்றும் அங்கன்வாடி பள்ளிகளில் உள்ள எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

மேலும் படிக்க:மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி.. வெளியான வீடியோவால் பரபரப்பு.. வழக்கு பதிந்து போலீசார் விசாரணை..

மேலும் தமிழக அரசால் கொண்டுவரப்பாட இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களின் செயல்பாடுகள் நன்றாக உள்ளது. அதனால் அவர்களை LKG, UKG வகுப்புகளுக்கு  ஆசிரியர்களாக நியமிப்பில் பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். 

பின்னர் பேசிய அவர், பள்ளி வளாகங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளுக்கு எங்கும் அனுமதி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.முன்னதாக நேற்று  கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி நடப்பது தொடர்பான புகைபடம் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

மாநகராட்சி பள்ளி வளாகங்களில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை எனவும் தனியார் அமைப்பினர் பயிற்சி நடைபெறுவது குறித்து உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார்.

மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி அளித்ததாக  வந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி கல்வி அலுவலர் உரிய விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க:தமிழகத்தில் மத கலவரம் நடக்க கூடாது.. விசிக திருமாவளவனின் அழைப்பை ஏற்ற வேல்முருகன்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios