ஆசிரியர்கள் தமிழில் தான் கையொப்பமிட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழக அரசு சார்பில் கடந்த 2021ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை பின்பற்றும் விதமாக ஆசிரியர்கள் அனைவரும் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் தங்களது பெயர்களை எழுதும் போதும், கையொப்பமிடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று தமிழக அரசு கடந்த 2021ம் ஆண்டு அரசாணை ஒன்றை வெளியிட்டது.
இந்நிலையில் அந்த அரசாணையை பின்பற்றும் விதமாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் அதனை சார்ந்த அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், தமிழக அரசின் அரசாணையை செயல்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித்துறையின் கீழ்
வேலூர் மாவட்டத்தில் காவலர் மீது சரக்கு வாகன ஓட்டுநர் தாக்குதல்; வீடியோ வெளியாகி பரபரப்பு
பணி செய்து வரும் அதிகாரிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட அனைவரும் வருகைப்பதிவு உள்பட அனைத்து ஆவணங்களிலும் தமிழில் தான் கையொப்பமிட வேண்டும். மேலும் மாணவர்களையும், தமிழில் பெயர் எழுதவும், கையெழுத்திடவும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.