Asianet News TamilAsianet News Tamil

அதிர்ச்சி தகவல்.. 1,747 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பணிநீக்கம்..? பள்ளிக்கல்வித்துறை திடீர் முடிவு..

இதுவரை டெட் தேர்வில் தேர்ச்சியடையாமல் உள்ள 1,747 அரசுப்பள்ளி ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக் தகவல் வெளியாகியுள்ளது.

School education decided to 1,747 government school teachers who did not pass in TET Exam to dismiss
Author
First Published Oct 22, 2022, 4:16 PM IST

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் படி தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. 

முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2 ஆம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணியமர்த்தப்படுவர்.தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. 

மேலும் படிக்க:குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியீடு.. எப்போது தெரியுமா..? வெளியான தகவல்

இதனையடுத்து புதிதாக ஆசிரியர் பணியில் சேருபவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுபோல் ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் டெட் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக ஏற்கெனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு மீண்டும் டெட் தேர்வெழுத அரசு சார்பில் அவகாசம் தரப்பட்டது. 

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சிறுபான்மையின பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டும் டெட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டும் டெட் தேர்வில் இன்னும் தேர்ச்சி பெறாமல் இருக்கும் 1,747 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யன் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தேர்ச்சி பெறாதவர்களை பணிநீக்கம் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:இன்று 6 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதிகளில் அடித்து ஊற்றப்போகும் மழை.. வானிலை அப்டேட்

Follow Us:
Download App:
  • android
  • ios