ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், ‘தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 14.10.2022 முதல் 20.10.2022 வரை இருவேளைகளில் நடத்தப்படும் என 23.09.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பத்திரிகைச் செய்தி வெளியிடப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க..போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.! குடிமைப் பணிகளுக்கு இலவச பயிற்சி - எவ்வாறு விண்ணப்பிப்பது ?

கணினி வழித் தேர்விற்கான கால அட்டவணை (Schedule) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.தற்போது , தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதிச் சீட்டு -1 (District Admit Card.I) இன்று 07.10.2022 முதலும் தேர்வு மையம் (இடம்) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு -2 ( Venue - Admit Card - II ) திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் , ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User Id மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.. 10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும் ? வெளியானது முக்கிய அறிவிப்பு