sasikala husband natarajan liver from poor youth
உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள கிளனேஜல்ஸ் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. நடராஜனின் உறவினரின் கல்லீரலை நடராஜனுக்கு மாற்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடராஜனுக்கு மாற்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அவரது உறவினரின் உடலுறுப்புகள் தானா? இல்லை ஏழை இளைஞரின் உடலுறுப்பா? இதோ படிங்க இந்த கொடுமைய...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூத்தாடிவயல் என்ற கிராமத்தைச் சேர்ந்த கார்த்தைக் என்ற 19 வயது இளைஞர், தினசரி கூலித் தொழிலாளி. தலையில் பலத்த காயத்துடன் கடந்த மாதம் 30-ம் தேதி, அதாவது சனிக்கிழமை தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. திங்கட்கிழமை இரவு கார்த்திக்கை தஞ்சாவூர் அரசு மருத்துவமனையிலிருந்து வெளியேறி சென்னை கிளனேஜல்ஸ் குளோபல்(நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள) மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். கார்த்திக்கின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை சென்னைக்கு அழைத்து செல்ல வேண்டாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் மருத்துவரின் அறிவுரையை மீறி கார்த்திக், சென்னைக்கு அழைத்து செல்லப்படுள்ளார். தஞ்சாவூர் அரசு மருத்துவமனையிலிருந்து திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு தனியார் ஆம்புலன்சில் கார்த்திக்கை திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். கோயம்பத்தூர் கங்கா மருத்துவமனையிலிருந்து வரவழைக்கப்பட்ட ஹெலி ஆம்புலன்சில் கார்த்திக்கை திருச்சியிலிருந்து சென்னைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
(அந்த ஹெலி ஆம்புலன்சிற்கு ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் ரூ.1 லட்சம். கார்த்திக்கோ ஒரு கூலித்தொழிலாளி.)
சென்னை குளோபல் மருத்துவமனைக்கு நள்ளிரவு 01:45 மணிக்கு கொண்டுவரப்பட்ட கார்த்திக்கை செவ்வாய்க்கிழமை காலை 10:30-க்கு சோதித்த நரம்பியல் மருத்துவர், கார்த்திக் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். கார்த்திக் மூளைச்சாவு அடைந்ததால் அவரது கல்லீரலையும் சிறுநீரகத்தையும் நடராஜனுக்கு மாற்றி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த தகவல் பிரபல ஆங்கில நாளிதழின் இணையத்தில் வெளியாகியுள்ளது.
பொதுவாக உடலுறுப்பு தானம் செய்ய தமிழ்நாடு உடலுறுப்பு பதிவு நெட்வொர்க்கில் பதிவு செய்து சீனியாரிட்டி அடிப்படையில் காத்திருப்பவர்களுக்குத்தான் உடலுறுப்புகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் எந்த நடைமுறையும் பின்பற்றப்படாமல் கார்த்திக்கின் கல்லீரலையும் சிறுநீரகத்தையும் நடராஜனுக்கு பொருத்தியுள்ளனர்.
ஏழை இளைஞரின் உறுப்புகளை அநியாயமாக அபகரித்து அறுவைசிகிச்சை செய்ததோடு இல்லாமல், நடராஜனின் உறவினரின் உறுப்புகளைத்தான் நடராஜனுக்கு பொருத்தியதாக பொய் தகவல் பரப்பப்பட்டுள்ளது.
ஏழை என்ற ஒரே காரணத்தினால் கார்த்திக்கும் அவரது குடும்பத்திற்கும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. கார்த்திக்கின் பெற்றோரின் அனுமதியின் பேரில் தான் உறுப்புகள் பெறப்பட்டனவா? என்ற கேள்வி எழுகிறது.
மேலும் தஞ்சாவூர் மருத்துவமனையிலேயே கார்த்திக் மூளைச்சாவு அடைந்துவிட்டாரா? அல்லது சென்னை குளோபல் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைய வைக்கப்பட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது.
