Sand theft in different parts Two people arrested for action Tractor seized ...

விருதுநகர்

விருதுநகரில், ராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூரில் மணல் திருடிய இருவரை காவலாளர்கள் கைது செய்து, இரண்டு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சுந்தரநாச்சியார்புரம் மலையடிவாரப் பகுதியில் எஸ்.ஐ. ராமசாமி மற்றும் காவலாளர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது புல்லுபத்திகாடு என்னுமிடத்தில், மணல் ஏற்றிவந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அனுமதியின்றி திருட்டுத்தனமாக ஆற்று மணலை திருடிக் கொண்டு வந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக டிராக்டர் ஓட்டுநர் மகேஷ்குமாரை (28) காவலாளர்கள் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் மற்றும் 4 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். 

மணல் திருட்டுக்கு உடந்தையாக இருந்த இதேபகுதியைச் சேர்ந்த செல்வகணபதி, முத்துசாமி உள்ளிட்ட நால்வரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.

அதேபோன்று, திருவில்லிபுத்தூர் நகர் காவல் சார்பு ஆய்வாளர் சிராஜூதின், மடவார்வளாகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டார். பின்னர் ஓட்டுநரிடம் மேற்கொண்ட விசாரணையில், திருவண்ணாமலை அருகே அரசு நிலத்தில் மணல் திருடி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து டிராக்டர் ஓட்டுநர் பூச்சையா மகன் ராஜ்குமார் (23) என்பவரைக் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராமசாமி என்பவரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.