அரியலூர் 

அரியலூரில், கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப் பயன்படுத்திய இரண்டு லாரிகள், இரண்டு சுமை ஆட்டோக்கள் மற்றும் ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். 

அரியலூர் மாவட்டம், வெங்கனூர் காவலாளர்கள் நேற்று செம்பியக்குடி பகுதி கொள்ளிடம் ஆற்றில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, ஜேசிபி இயந்திரம் மூலம் சிலர் லாரியில் மணல் அள்ளிக்கொண்டிருந்ததை காவலாளர்கள் கண்டனர். காவலாளர்களின் வருகையைக் கண்டதும் மணல் கொள்ளையர்கள் தங்களது வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். 

இதனையடுத்து காவலாளர்கள், இரண்டு லாரிகள், 1 ஜேசிபி இயந்திரம், இரண்டு சுமை ஆட்டோ ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். 

மணல் திருட்டி ஈடுபட்டவர்கள் குறித்து காவலாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.