கடவுளே... தேர்தல்ல ஜெயிச்சுடனும்.. திருத்தணி முருகனிடம் மனம் உருகி வேண்டிய சௌமியா அன்புமணி!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா. இவர் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டார். கடந்த ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வரும் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா. இவர் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டார். கடந்த ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வரும் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலில் சௌமியா அன்புமணி சாமி தரிசனம் மேற்கொண்டார்.
இதையும் படிங்க: வைகாசி விசாகப் பெருவிழா; பழனி திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு
அவருடன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் உடனிருந்தார். பின்னர் சௌமியா அன்புமணிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் விபூதி, பிரசாதங்கள், பூ மாலை, அணிவித்து மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சௌமியா அன்புமணியிடம் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தர்மபுரி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி சாமி தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: Pournami Girivalam: திருவண்ணாமலை பவுர்ணமிக்கு கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு!